‘ பேராயரை விமர்சிப்பதற்கு கம்மன்பிலவுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. அரசியல் இலாபம் கருதியே அவர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் திசை திருப்பபடக்கூடாது. அவை வெளிப்படைதன்மையுடன் இடம்பெறவேண்டும். இது விடயத்தில் கத்தோலிக்க சபை நிற்கும் பக்கமே நாம் நிற்போம்.
பேராயரை விமர்சிப்பதற்கு உதய கம்மன்பிலவுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவதற்கே கம்மன்பில தரப்பு முயற்சிக்கின்றது.
மலட்டு கொத்து, மலட்டு மார்பு கச்சை உள்ளிட் விடயங்கள் தொடர்பில் இவர்களே பிரச்சாரம் முன்னெடுத்தனர். இஸ்லாம் அடிப்படைவாதம் பற்றி பாடம்கூட எடுத்துள்ளனர்.
தேர்தல் நெருங்கும்வேளை, அரசியல் இலாபம் தேடும் நோக்கிலேயே கம்மன்பில அறிக்கையை வெளியிட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் உள்ளது.” – என்றார்.
