பொகவந்தலாவை, லெச்சுமி தோட்டத்தின் கோவில் அருகாமையில் உள்ள லயத்திற் அருகில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
113 இலக்க லயன் அறைகள் உள்ள பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொகந்தலாவை போஸ்ட், லெச்சுமி தோட்டம், பணிய கணக்கு, கோயிலுக்கு அருகில் உள்ள லயன் வீடுகள் இதனால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிறிய கற்பாறைகள் சரிந்துள்ளதுடன் மண் திட்டும் சரிந்துள்ளதாகவும், இதனால் லயன் அறைகள் அபாய நிலையில் இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பலத்த மழை பெய்துவரும் நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.



