பொகவந்தலாவ சுகாதார பிரிவில் மேலும் 42 பேருக்கு கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் பொகந்தலாவ மற்றும் அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பகுதிகளில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை சுகாதாரப்பிரிவில் நேற்று வெளியான பி.சி.ஆர் முடிவுகளின் படி 42 பேருக்கும், அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகாரப்பிரிவுக்கு உட்பட்ட சமனலகம, ஹட்டன் சுற்றுப்புற வீதி , புறுட் ஹில், கந்தையா கட்டிடம் உள்ளிட்ட பகுதிகளில் 15 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இந்த தகவலை  பொதுசுகாதார பரிசோதகர் இராமையா பாலகிருஸ்ணன் உறுதிப்படுத்தினார்.

தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ,ஹட்டன் பகுதியில் தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய 16 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் பொதுசுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

Related Articles

Latest Articles