பொகவந்தலாவ நகரில் எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்துவைப்பு!

பொகவந்தலாவை நகரில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்று இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

பொகவந்தலாவ நகரப்பகுதியில் எரிப்பொருள் நிரப்பு நிலையமொன்று இல்லாமல் இருந்ததால், எரிபொருள் நிரப்புவதற்கு நோர்வூட் மற்றும் ஹட்டனுக்கு செல்ல வேண்டி இருந்தது.

இந்நிலையில் இந்தியன் ஓயில் கோப்ரேஷன் நிறுவனத்தின் பணிப்புரைக்கு அமைய பொகவந்தலாவ
பகுதியில் பிரபல வர்த்தகர்களான பிரபு மற்றும் கனேசன் ஆகியோரின் முயற்சியால் எரிப்பொருள் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழாவின் பின்னர்
பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள மக்கள் இன்றைய தினம் தங்களது
வாகனங்களுக்கு எரிப்பொருளினை பெற்றுக்கொண்டனர்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

Related Articles

Latest Articles