கடும் காற்றுடன் கூடிய மழையால் பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் 319ஜி கிராம சேவகர் காரியாலயத்திற்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 36 குடும்பங்களை சேர்ந்த 200கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாகவே இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் எல்பட மேல்பிரிவு, மத்திய பிரிவு , சிங்காரவத்தை ஆகிய தோட்டபகுதிகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்ட்டுள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சமைத்த உணவும், தேவையான உதவிகளும் நோர்வூட் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது.
சதீஸ்