” பீல்ட் மார்ஷல் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால், அந்த பதவிக்கு மேலான கௌரவப் பட்டத்துடன் மீண்டு வருவேன்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
” எனது நான்கு நட்சத்திர அந்தஸ்த்தை மஹிந்தவே நீக்கினார், அவர் என்னை பழிவாங்கினாலும், அதுவே எனக்கு சாதகமாக அமைந்தது. அதனால்தான் நான் பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்துக்கு தரமுடிர்த்தப்பட்டேன்.
தற்போது பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிக்குமாறு சிலர் கூச்சலிடலாம். அவ்வாறு பறித்தாலும் அதைவிட உயரிய கௌரவ பதவியுடன் மீண்டும் வருவேன். ‘மார்ஷல் ஒப் சிறிலங்கா’ என்பது உயரிட பட்டம். அந்த நாமம் கிட்டும்.” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.