கட்சி தலைமையை கடுமையாக விமர்சித்தும், கட்சி ஒழுக்க கட்டமைப்பைமீறும் வகையிலும் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு ஆளுங்கட்சியில் இருந்து நேரம் பெற்றுக்கொண்டமை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சி எடுத்துள்ள முடிவுக்கு எதிராக செயற்படுகின்றமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டே ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராயப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கக்கூடாது என பொன்சேகா நீதிமன்றம் ஊடாக இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.