இராணுவ மனோநிலையில் இருக்கும் பொன்சேகா, ஜனாதிபதி வேட்பாளர் பதவி கிடைக்காததாலேயே சஜித் பிரேமதாசமீது சேறுபூச தொடங்கியுள்ளார் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித்தே வெற்றிபெறுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பயத்தால்தான் பொன்சேகா போன்றவர்கள் அரசுடன் இணைந்துகொண்டு சஜித்துக்கு எதிராக செயற்படுகின்றனர்.
தான் எந்த கட்சியில் இருந்தாலும் அந்த கட்சி தலைவரை விமர்சிப்பதையே பொன்சேகா வழக்கமாகக் கொண்டுள்ளார் .மஹிந்த, மைத்திரி, தற்போது சஜித் என பலரையும் விமர்சித்துள்ளார். அதுதான் அவரின் இராணுவ மனோநிலை. எனவே, அவரின் கருத்து தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை.
ஒக்டோபரில் நிச்சயம் ஜனாதிபதி தேர்தல் நடக்கும். அதில் சஜித் வெற்றிபெறுவார் என்பது உறுதி.” – என்றார்.










