2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரதான கட்சிகள் தற்போதிருந்தே தயாராகிவரும் நிலையில், சிறு கட்சிகளும் அத்தேர்தல் குறித்து கவனம் செலுத்திவருகின்றன.
மறுபுறத்தில் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே வருகின்றது.
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் உள்ளது.
அத்துடன், சரத் பொன்சேகா, சரத் வீரசேகர, அமைச்சர் ரொசான் ரணசிங்க ஆகியோரும் தற்போது அந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.
சிங்கள தேசியவாத அமைப்புகளை ஒன்றுதிரட்டும் முயற்சியில் சரத்வீரசேகர ஈடுபட்டுவருகின்றார்.
மக்கள் போராட்டக்காரர்களின் ஆதரவை பெற்ற அரசியல்வாதியாக பொன்சேகா இருக்கின்றார்.
