இலங்கையை வங்குரோத்து அடைய வைத்தவர்களின் சிவில் உரிமைகளை பறிக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளது.
கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று (23) பொது மக்களிடம் கையெழுத்து திரட்டும் பணி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பமானது.
‘நீதிக்கான மக்கள் ஆணையைக் கட்டியெழுப்புவோம்‘ எனும் தொனிப்பொருளில் கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதுடன் சமய தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் திரண்டு தங்களின் கையொப்பங்களை பதிவிட்டனர்.










