ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சு இன்று நடைபெற்றது.
இந்தியாவுக்கு நேற்றும் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில், இந்திய வெளிவிவகார அமைச்சருடன் நேற்றிரவு பேச்சு நடத்தினார்.

இன்று காலை இந்தி தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, கலாச்சார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
