” நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை ஒரே வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்க்கவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது.அந்த நிலையை எதிர்கொள்ள அரசாங்கம் நாட்டை தயார்படுத்த வேண்டும். தற்பொழுது அந்த பணியையே அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு பல்கலைக்கழக பட்டப் பின் பிடிப்பு பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2024 வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
புதிய சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கிலேயே அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.










