பொருளாதார நெருக்கடி- வெளிநாடுகளில் குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெளிநாடுகளில் குடியேறுவதற்கு கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வெளிநாடுகளில் குடியேறுவோரின் எண்ணிக்கை நூற்றுக்கு 30 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமையினை காரணமாக தெரிவித்தே பலர் வெளிநாடுகளில் குடியேறுவதற்கான கோரிக்கைகளை முன்வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் குடியேறுவதற்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கிலிருந்து மாத்திரம் கடந்த சில நாட்களில் 200  இற்கும் மேற்பட்டோர் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles