நாட்டில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் உரப் பிரச்சினை இதுவரை வெற்றிகரமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஆகையினால், பதற்றமடையாமல் பொறுமையாக இருந்தால், எஞ்சியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றார்.
நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்ட நிலையில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை சில வாரங்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தது. சர்வ கட்சி அரசாங்கம் அமைக்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் எவரும் முன்வராத நிலையில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றது தெரிந்ததே.










