புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பது தொடர்பில் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது என அறியமுடிகின்றது.
பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட சி.டி.விக்ரமரத்ன நேற்று முன்தினத்துடன் சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.
இந்நிலையிலேயே புதிய பொலிஸ்மா அதிபர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் நோக்கில் இன்று விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, புதிய பொலிஸ்மா அதிபரை தேர்வு செய்யும்வரை பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், பதில் பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதியால் நியமிக்கக்கூடும் எனவும் தெரியவருகின்றது.