பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு இடமாற்றம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கமைய 5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG), 35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP), 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் (SP), 7 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் (ASP) இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பிரதிப் பணிப்பாளராக இருந்த மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ். முத்துமால குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி பதவியிலிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.எஸ். தெஹிதெனிய, நுகேகொடை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles