பொல்லால் தாக்கி முதியவர் படுகொலை! கொட்டாஞ்சேனையில் பயங்கரம்!!

இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்ட்டுள்ளார். கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வத்தளை, ஹூனுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயது வயோதிபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles