சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 21 நாட்களில் போதைப்பொருட்களுடன் மலையேறுவதற்கு வந்த 149 யாத்திரிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஹட்டன் பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவனொளி பாத யாத்திரை ஆரம்பமான டிசம்பர் 7 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 31 ஆம் திகதி வரையான 21 நாட்களில் ஹட்டன் பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் ஹட்டன் பிரதேச பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாத்திரிகள் பயணம் செய்யும் வாகனங்களை
“ஸ்டவுட்” என்ற மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
