மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலமான் பகுதியில் ஒரு வகையான போதைப்பொருளுடன் 31 வயதுடைய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் பதுக்கி வைத்திருந்த போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்மீது வழக்கு தொடுக்கப்படவுள்ளது. மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
நிருபர் – ராமு தனராஜா
