போதைப்பொருள் கடத்தல்காரர் உட்பட மூவர் கைது!

வலபொல பொட்டா என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தற்காரர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் பாணந்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் பெண் ஒருவரும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

104 கிராம் ஹெரோயின் மற்றும் 10 இலட்சம் ரூபா பணம் என்பன சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று (07) அதிகாலை வீடொன்றில் மறைந்திருந்த போதே சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles