இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்றது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.
48.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா 329 ஓட்டங்களை பெற்றது.
பதிலெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 322 ஓட்டங்களை பெற்று போராடி தோற்றது.
https://www.espncricinfo.com/series/england-tour-of-india-2020-21-1243364/india-vs-england-3rd-odi-1243395/full-scorecard