” போராட்டக்காரர்களை தாக்கியவருக்கு இராஜாங்க அமைச்சு” – சீறுகிறது ஜே.வி.பி.

” காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தியவர், நாடாளுமன்றத்தில் மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொண்டவர் , சீனாவிலிருந்து கழிவுக் கப்பலை நாட்டுக்கு கொண்டு வந்து நஷ்டத்தை ஏற்படுத்தியவர் ஆகியோருக்கும் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.”

இவ்வாறு ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் வரிப்பணத்தை வீண்விரயமாக்க இராஜாங்க அமைச்சுகள் நியமனம் எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related Articles

Latest Articles