போர் இடைநிறுத்தம் முடிவடைந்த 2 நாட்களில் 200 பேர் உயிரிழப்பு!

காசா மீதான தாக்குதல் போர்நிறுத்த உடன்படிக்கையால் நிறுத்தப்பட்டது. இருதரப்பில் இருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் போர்நிறுத்தம் முடிவடைந்த பின்னர் இஸ்ரேல் மீண்டும் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது.

இரண்டு நாட்களாக காசாவில் உள்ள நூற்றுக்கணக்கான இலக்குகள் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசியுள்ளது.

இதில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்துள்ளதாக காசாவின் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கத்தார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்தின் கீழ் போரில் ஒரு இடைநிறுத்தத்தை புதுப்பிக்க பாலஸ்தீன குழுவுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles