பணயக் கைதிகளை மீட்பதற்காக நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்வதற்கு இஸ்ரேல் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே 46 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருவதால் காசாவில் உள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு மனிதாபிமான உதவி கிடைக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டன. குறிப்பாக அமெரிக்கா உதவியுடன் கட்டார் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய மத்தியஸ்தரராக செயல்பட்டுவருகின்றது.
இந்நிலையில் இருதரப்பிலும் பிணைக்கைதிகள், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்ய கட்டார் பேச்சு நடத்தி வந்தது. இதனால் ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்துள்ள 240 பிணைக்கைதிகளில் 50 பேரை விடுதலை செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
இதனால் இஸ்ரேல் அமைச்சரவை நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு 10 பிணைக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒருநாள் போர் ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனால் ஹமாஸ் விரைவில் பிணைக்கைதிகளை விடுவிக்கும் என எதிர்பார்க்கலாம்.