தந்தை மகனுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் மகன் பலியான சம்பவம் ஒன்று நேற்று (31) இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் பலாங்கொடை ஓபநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 31 வயதான மகன் பலியாகியுள்ளார்.
மகனின் மரணம் தொடர்பில் 57 வயதான தந்தை சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை ஓப்பநாயக்க பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.










