மக்களுக்கு அச்சுறுத்தலெனில் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு ஆதரவு இல்லை – எஸ்.பி.!

” மக்களின் பாதுகாப்பு, ஊடக பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமொன்று அவசியம். அதற்கேற்ற வகையிலேயே புதிய சட்டம் அமையுமென நம்புகின்றேன். மக்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலெனில் அதனை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரிக்காது.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க கூறியவை வருமாறு,

” மக்களின் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு, ஊடகங்களின் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தக்கூடிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்று அவசியமென்ற நிலைப்பாட்டிலேயே எமது கட்சி இருக்கின்றது.

புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் எனக்கு தெரியாது. அது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது. ஜே.வி.பி. உட்பட பயங்கரவாத செயலில் ஈடுபட எத்தனிக்கும் நபர்களுக்கு இத்தகைய சட்டம் வலிக்கும். அத்தகையவர்களே போலி பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றன.

Related Articles

Latest Articles