மக்களுக்கு சேவை செய்கிறோம்: துரோகம் செய்யவில்லை!

“ சம்பள விடயத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது, இது அரசியல் நோக்கத்திற்காக நாங்கள் செய்யவில்லை. எங்களது மக்களுக்காக வேலை செய்து சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம்” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ சம்பள நிர்ணய சபையுடாக 1,700 சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம், இதற்கு நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்திற்கு பின் சில அரசியல் தலைவர்களும் தொழிற்சங்க தலைவர்களும் இது ஒரு ஏமாற்றம் இது ஒரு துரோகம் என தெரிவித்தார்கள். அவர்கள் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது நாங்கள் முழு மனதுடன் நாங்கள் எங்களது மக்களுக்காக வேலை செய்து சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம்.

1,700 பொறுத்த வரையில் மே 1 ஆம் திகதி நாங்கள் வெளியிட்ட வர்த்தமானியில் 1,350 அடிப்படை சம்பளமும் 350 ஊக்குவிப்பு தொகையும் வழங்கி இருந்தோம். இந்த சம்பள விடயத்தை பெற்றுக்கொடுக்கும் போது நிறைய பேர் சொல்லி இருந்தார்கள் நாங்களும் இதற்கு அழுத்தங்கள் கொடுத்தோம் என கூறுகிறார்கள்.

நான் வெளிப்படையாக தெரிவிக்கிறேன் இந்த சம்பள விடயத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது இது அரசியல் நோக்கத்திற்காக நாங்கள் செய்யவில்லை.” – என்றார்.

 

Related Articles

Latest Articles