நாட்டில் அண்மைக்காலமாக மீண்டும் டெங்கு நோய் தலைதூக்கியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தமது சுற்றுப்புறச் சூழலை துப்பறவாக வைத்திருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் கடந்த 9 மாதங்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையான 10ஆம் திகதி வரை நாடு முழுவதும் 12,102 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து 4 ,828 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அதிக எண்ணிக்கையிலான (2,994 பேர்) டெங்கு நோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.