மசாஜ் நிலையத்தில் சேவையாற்றிய இரு பெண்களுக்கு எயிட்ஸ்: 53 மசாஜ் நிலையங்களுக்கு பூட்டு!

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 53 மசாஜ் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

“ நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார நடவடிக்கை இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்படி பகுதிகளில் உள்ள மசாஜ் நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டன.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் இரு பெண்களுக்கு எச்ஐவி வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

53 மசாஜ் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 137 பெண்களும், 8 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.” – எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

 

Related Articles

Latest Articles