மதவாச்சி பொலிஸ் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் மூன்று விபசார விடுதிகளை நடாத்திச் சென்ற உரிமையாளர்கள் உட்பட 09 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதவாச்சி நகரில் அமைந்துள்ள இரண்டு மசாஜ் நிலையங்களையும் வஹமலுகொல்லாவயில் அமைந்துள்ள மசாஜ் நிலையம் ஒன்றையும் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
தொடர்ந்து பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஐ.பீ. ரத்னாயக்க தலைமையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டன.