மடுல்சீமையில் சிறிய உலக முடிவை காணச்சென்ற வைத்தியர் விபத்தில் காயம்

பதுளை, மடுல்சீமை பகுதியில் அமைந்துள்ள சிறிய உலக முடிவை காணச்சென்ற வைத்தியர்கள்குழுவொன்று பயணித்த கார்மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் வைத்தியரொருவர் காயமடைந்துள்ளார்.

ராகம வைத்தியசாலையில் சேவையாற்றும் 38 வயதுடைய வைத்தியர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். நண்பர்கள் சகிதம் சிறிய உலக முடிவை காண்பதற்கு இரு கார்களில் வைத்தியர்கள் சென்றுள்ளனர்.

ஒரு கார் மடுல்சீமை, கொக்கல பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கையிலேயே மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது.

காயமடைந்த வைத்தியர் மெட்டிக்காத்தன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles