ஹப்புத்தளை – ஓஹியா மற்றும் இந்தல்கஸ்ஹின்ன ஆகிய இடங்களுக்கு இடையிலான புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதம் ஓஹியா புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஹப்புத்தளை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையக ரயில் பாதையை சீரமைக்க சுமார் 03 மணித்தியாலங்கள் தேவைப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ராமு தனராஜ்