பதுளை – கொழும்பு பிரதான வீதியில் பலாங்கொடை பம்பஹின்ன பகுதியில் நேற்றிரவு மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
வீதியில் குவிந்து கிடக்கும் மண்களை அகற்றிவிட்டு, போக்குவரத்தை சீர் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
நாட்டில் பெய்துவரும் கடும் மழையால் மலையகத்தில் பல பகுதிகளில் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன .