பதுளை, ஹாலிஎல பிரதேச சபைக்குட்பட்ட ஸ்பிரிங்வெளி – நல்லமலை தோட்டத்தில் உள்ள இல 4. லயன் குடியிருப்பு பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் இக்குடியிருப்பில் 08 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை தோட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

