மண்சரிவு அபாயம் காரணமாக மலையகத்துக்கான ரயில் சேவை நானுஓயாவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை தொடர்வதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் மார்க்கங்களில் மண் மற்றும் கற்பாரைகள் விழக்கூடிய அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பதுளையில் சில இடங்களில் ரயில் மார்க்கத்தில் மண் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்தை குறிப்பிடத்தக்கது.