கடும் மழையை அடுத்து ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தால் கண்டி, ரங்கல தோட்டத்தில் உள்ள 12 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டவர்கள், ரங்கல கனிஷ்ட வித்தியசாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
” நேற்று முதல் இங்கு தங்கியுள்ளோம். நிவாரணம் கிடைக்கவில்லை. பாதுகாப்பான இடமில்லை. எனவே, எங்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.










