மண்ணுக்குள் புதையுண்ட தாய், தந்தை, இரு மகள்மார்! தீபாவளியன்று சோகம்!!

பலாங்கொடையில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளனர்.

தாய், தந்தை மற்றும் இரு மகள்மாரே இவ்வாறு காணாமல்போயுள்ளனர் .

பலாங்கொடை , கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியிலேயே நேற்றிரவு 8 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

நான்கு வீடுகள்மீது மண் சரிந்துள்ளது. இதில் ஒரு வீடு முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. அந்த வீட்டில் இருந்தவர்களே காணாமல்போயுள்ளனர். மீட்பு பணி இடம்பெறுகின்றது.

Related Articles

Latest Articles