மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் பலி

கேகாலை பிரதேசத்தில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேகாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிசொவெல பிரதேசத்தில் 24 ஆம் திகதிக சனிக்கிழமை மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேம்பால நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது பலத்த காயமடைந்த நபர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 40 வயதுடைய, மஹவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles