கொத்மலை, வெவதென்ன வெவஹேன நீர்வீழ்ச்சிக்கு அருகில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொத்மலையை சூழ உள்ள கிராம வாசிகள் இரண்டாவது முறையாகவும் இன்று (05) பகல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொத்மலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள மேற்படி நீர்வீழ்ச்சியினை பார்வையிடுவதற்காக தினமும் நூற்றுக்கணக்காக உள்நாட்டு ,வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
அத்துடன், அருகில் பாடசாலைகள் மற்றும் மதஸ்தானங்களும் அமைந்துள்ளன.
இந்நிலையிலேயே இப்பகுதியில் மதுபான சாலை அமைப்பதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
