மதுபானம், சிகரெட் விலைகள் அதிகரிப்பு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபான போத்தலொன்றின் விலை 300 ரூபாயினாலும் பியர் ஒன்றின் விலை 50 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இன்று (01) முதல் அமுலாகும் வகையில், சிகரெட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மதுவரி அதிகரிக்கப்பட்டமை காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நான்கு வகை சிகரெட்களின் விலைகள் தலா 5, 15, 20, 25 ரூபா என்ற அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles