உள்ளுர் உற்பத்தியிலான தரம் வாய்ந்த மதுபான உற்பத்திகளை அடையாளம் காண்பதற்கு விசேட செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளதாக மது வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
மதுவரித்திணைக்களத்தின் ஆணையாளர் எம் ஜெ குணசிரி இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 15 நாட்களுக்குள் குறித்த செயலியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணினி செயற்பாட்டு முறைமைக்கு அமைய உள்ளுர் மது உற்பத்திகள் விநியோகிக்கப்படவிருந்த நிலையில். தொழிநுட்க கோளாறுகள் காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத மது பான உற்பத்தி காரணமாக சந்தையில் போலியான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தேசிய மதுபான உற்பத்திகளுக்கு ஸ்டிக்கர்களை காட்சி படுத்தும் முறைமை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மதுவரித்திணைக்களத்தின் ஆணையாளர் எம் ஜெ குணசிரி தெரிவித்துள்ளார்.
