பின்லாந்து பிரதமர் சன்னா மரின் நடனமாடும் வீடியோ ஒன்று கசிந்ததை அடுத்து அவர் மீதான விமர்சனங்கள் வலுத்துள்ளன.
சமூக ஊடகத்தில் இருந்த எடுக்கப்பட்டதாக நம்பப்படும் வீடியோ ஒன்றில் அவர் மற்றும் நண்பர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் ஆடிப் பாடி மகிழும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வெளியிட்டு வருவதோடு, அவர் போதைப் பொருள் எடுத்துக்கொண்டதாகவும் குற்றம்சாட்டுகின்றன.
36 வயதான மரின் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். தாம் மதுபானம் மாத்திரமே அருந்தியதாகவும் ஆரவாரமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் இளம் அரச தலைவராக சாதனை படைத்த அவரின் சாதனையை தற்போது அவரை விடவும் மூன்று மாதங்கள் மாத்திரம் இளையவரான சிலி ஜனாதிபதி கப்ரில் பொலின் வகிக்கிறார்.
மரின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ரகசியமானது அல்ல என்பதோடு இசை நிகழ்ச்சிகளில் அவரை அடிக்கடி காண முடிகிறது. கடந்த ஆண்டு இரவு விடுதி ஒன்றுக்கு சென்று கொவிட் விவகாரத்தில் சிக்கிக் கொண்டதால் மன்னிப்புக் கோட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.