மத்திய கிழக்கு நிலைவரம் குறித்து ஆராய அமைச்சரவை உப குழு!

 

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் அமைச்சரவை உப குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்திய போர்ச்சூழல் காரணமாக, எதிர்காலத்தில் இலங்கை எதிர்கொள்வதற்கு நேரிட்டுள்ள சவால்கள் தொடர்பில், தயார்நிலை இருக்க வேண்டிய தேவை பற்றி அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய மத்தியகிழக்கு போர்ச்சூழல் தொடர்பில் ஆராய்ந்து, தாக்கங்கள் ஏற்படக்கூடிய துறைகள், தாக்கத்தின் அளவு மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றிய மீளாய்வு செய்து,அமைச்சரவைக்கு சந்தர்ப்பத்திற்கேற்ப பொருத்தமான விதந்துரைகளை வழங்குவதற்காகவே மேற்படி அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான விஜித ஹேரத், சமந்த விதயாரத்ன, வசந்த சமரசிங்க மற்றும் குமார ஜயகொடி ஆகியோர் உப குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேற்படி உபகுழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஏற்புடைய அமைச்சுக்களின் செயலாளர்களுடன் கூடிய குழுவொன்றையும் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles