நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 28பி விஜிதபுர பகுதியில் தனது கணவரை மனைவியொருவர் குத்தி கொலை செய்துள்ளார்.
நேற்றிரவே இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
33 வயதுடைய பஹிதரன் சந்திரசேகரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
விஜித்தபுர மார்காஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில் வைத்து கணவன், மனைவிக்கிடையே இரவு 11 மணி அளவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் மனைவினால் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகிய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வர் ஆவார்.
அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான பாத்திமா ரிஸ்வானா கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டி. சந்ரு, நானுஓயா நிருபர்










