குடும்ப பிரச்சினை காரணமாக கணவனுக்கு எதிராக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வந்த சந்தர்ப்பத்தில், பின் தொடர்ந்து வந்த கணவர் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து நஞ்சருந்திய சம்பவமொன்று கம்பளை, புபுரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றுள்ளது
சனிக்கிழமை (29) மாலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பன்விலதென்னை ரஜதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு நஞ்சருந்தியுள்ளார்.
பன்வில தென்னை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
கொழும்பில் தொழில் செய்த சந்தர்ப்பத்தில் காதலித்து ஐந்து வருடங்களுகு முன்னர் திருமணம் செய்துள்ள மேற்படி தம்பதிகளுக்கிடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை நீடித்து வந்ததாகவும் இது தொடர்பாக இதற்கு முன்னரும் 6 தடவைகள் மனைவியினால் கணவனுக்கு எதிராக புபுரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 7 வது முறைப்பாடு செய்ய வந்த சந்தப்பத்திலேயே மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது
பொலிஸ் நிலைய கதவருகே வைத்து எதிர்பாராத விதமாக திடீரென தான் மறைத்து வைத்திருந்த நஞ்சு குப்பியினை எடுத்து அவர் அருந்திய சந்தர்ப்பத்தில், பொலிஸார் நஞ்சு போத்தலை பறித்தெடுத்ததுடன் குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கம்பளை நிருபர்