மன்னார், முருங்கன் பகுதியில் 9 கிலோ 920 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 42 வயதுடைய இரு சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
