கொரோனா வைரசினால் தான் உயிரிழந்தால் பிள்ளை எப்படி வாழும் என்ற ஏக்கத்தில் இலங்கைப் பெண் ஒருவர், தனது 5 வயது மகளை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை – யாழ்ப்பாணத்தில் பிறந்த 36 வயது சுதா சிவானந்தம், தெற்கு லண்டன் பிளாட்டின் பகுதியில் வசித்து வந்தார். ஏறைக்குறைய ஒரு வருடமாக அவர் மர்ம நோய்கள் பற்றி அச்சத்தில் இருந்துள்ளார். கொரோனா வைரஸ் குறித்த அச்சம், முடக்கக் கட்டுப்பாடுகளால் தனது மனைவி மனப் பிறழ்விற்குள்ளாகியிருக்கலாம் என்று குறித்த பெண்ணின் கணவர் நம்புகிறார்.
லண்டனில் Mirchamஇல் இருக்கும் வீடு ஒன்றில் 2020, ஜூன் மாதம் 30ஆம் திகதி 5 வயது மகளான சாயகி என்ற சிறுமியை அவரது தாய், வீட்டின் படுக்கை அறையில் 15 முறை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.
இதன்பின்னர் அவரும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனினும், படுகாயங்களுடன் வீட்டில் கிடந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் Old Bailey நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
சுதா சிவானந்தன் தன்னுடைய திருமணத்திற்கு பின்னர் 2006ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வசித்து வந்துள்ளார்.
கணவர் சுகந்தன் சிவானந்தம் சூப்பர் மார்க்கெட்டில் இருந்தபோது, அவரது மனைவி தங்கள் மகளை மிட்சாமில் உள்ள வீட்டில் கொலை செய்துள்ளதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. குழந்தையின் கழுத்து, மார்ப்பு, அடிவயிறு ஆகிய இடங்களில் குத்தப்பட்ட காயங்களுடன் படுக்கையில் கிடந்துள்ளார்.
கணவரது இந்த வாக்குமூலம் நீதிமன்றில் வாசிக்கப்பட்டது.
கொவிட் கட்டுப்பாடுகள் அவரது நல்வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.’ என்று கணவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதா சிவானந்தத்திற்கு ஆங்கிலம் தெரியாது. நிச்சய திருமணம் செய்து 2006ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வசித்து வந்துள்ளதாக நீதிமன்றில் கூறப்பட்டது.
‘ஒரு நல்ல தாய்” என்று சுதாவின் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
2009ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் அவர் மர்மமான வலிகளைக் பற்றிக் குறிப்பிட்டு, சிகிச்சைக்குச் சென்றார். அடுத்த ஆண்டு கோடையில் அவள் தலைச்சுற்றல் மற்றும் எடை இழப்பு குறித்து கவலையுடன் இருந்தார்.
”பிரதிவாதி அவர் கண்டறியப்படாத கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு மோசமான கவலையை வளர்த்துக் கொண்டார்.” என்று சட்டத்தரணி பில் எம்லின் ஜோன்ஸ் நீதிமன்றில் குறிப்பிட்டார்.
‘தான் இறக்கப் போவதாக அவர் உறுதியாக நம்ப ஆரம்பித்துவிட்டார்.”
மருத்துவமனை சோதனைகளில் சுதா ஒரு கட்டத்தில் கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
”சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு, அவர் இறந்தால் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வீர்களா என்று தனது கணவரிடம் கேட்டுள்ளார்.” என்று சட்டத்தரணி குறிப்பிட்டார்.
”2000 ஜூன் 30ஆம் திகதி காலையில், அவர் தனது கணவரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுள்ளார். ஆனால் தான் செல்ல வேண்டும் என்று கணவர் விளக்கினார். இதனால் அந்தப் பெண் தனித்துவிடப்பட்டார்.”
சுதா பகலில் நண்பர்களுக்கு போன் செய்து தனது உடல்நிலை குறித்து புகார் கூறினார். ஆனால், இது சாதாரணமான விடயம் என்று அவர்கள் நினைத்துள்ளனர்.
கொலைச் சம்பவம் பற்றிய தகவல் அறிந்து பொலிசார் சென்றபோது, படுக்கையில் இருந்த சாயகி, கழுத்து, மார்பு, அடிவயிறு ஆகிய இடங்களில் பல முறை குத்தப்பட்டிருந்தார்.
”சாயகியின் தோளில் ஒரு கத்தி பதிந்திருந்தது. சிகிச்சையளிக்க அவரை தூக்கிச் சென்றபோது, கீழே விழுந்தது.” என அறிக்கையிடப்பட்டது.
தாய் மற்றும் மகள் இருவரும் அவசர உலங்குவானூர்த்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால் சாயகி பின்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அந்தக் குழந்தை 15 முறை குத்தப்பட்டுள்ளார். இரண்டு காயங்கள் அவரது இதயத்தில் ஊடுருவியுள்ளன.
”தனக்கு ஏதேனும் நேர்ந்தால் தன் குழந்தைக்கு என்ன நேரிடும் என்று கவலைப்படுவதாகவும், தன் மகள் அவள் இல்லாமல் வாழ முடியாது என்று நினைத்ததாகவும் பிரதிவாதி மருத்துவரிடம் கூறினார். என்று சட்டத்தரணி நீதிமன்றில் குறிப்பிட்டார்.
2020 செப்டம்பர் 11ஆம் திகதி பிரதிவாதி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அப்போது அவர் எழுதிய இரண்டு கடிதங்கள் கைப்பற்றப்பட்டன.
இவற்றில் ஒன்றில் சுதா மீண்டும் மன்னிப்புக் கேட்டிருந்தார். ”அன்றைய நாளில் எனக்கு என்ன ஆனது என்று இன்னும் தெரியவில்லை.” என்று குறிப்பிட்டிருந்தார்.
சுதா வயிற்று காயம் காரணமாக பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். இப்போது ஒரு கொலோஸ்டமி பையைப் பயன்படுத்துகிறார்.
சுதாவிற்கு சிகிச்சையளித்த ஒரு மனநல மருத்துவர், கொவிட் 19 முடக்கத்தால் ஏற்பட்ட சமூக தனிமை, மன அழுத்தம் என்பன அவரது கடுமையான மன நோயக்கு ஏதுவாக இருந்ததைக் கண்டறிந்தார்.
கணவர் சுகந்தன் சிவானந்தன் தனது அறிக்கையில்,
”என் மகள், என் மனைவிக்கு என்ன நேர்ந்தது என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. கொலை செய்வதற்கு முன்னர், மகிழச்சியான, நிறைவான வாழ்க்கையாகவே இருந்தது. எனினும், வேலையை கைவிட வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமாகவே இருந்தது.” என்றார்.
சுகந்தன் சிவானந்தம் தனது மனைவியுடன் பேசவில்லை என்று கூறினார். ஆனால் அவரது செயல்களுக்கு அவர் பொறுப்பல்ல என்று ஏற்றுக்கொள்கிறார்.
”அவள் நன்றாக இருந்திருந்தால் அவளால் எங்கள் மகளைக் கொல்ல முடியாது என்று எனக்குத் தெரியும்.” என்று கூறினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வெண்டி, ஜோசப் இந்த வழக்கு ஒரு ”பயங்கரமான சோகம்” என்று விபரித்தார்.
அவரது மனநல சிக்கல்களால் குடும்பம் எவ்வளவு பெரிய பேரழிவைச் சந்தித்தது என்பது புலப்பட்டதாக குறிப்பிட்டார்.
சுதா சிவானந்தம் மனநலச் சட்டத்தின் 37 மற்றும் 41 பிரிவுகளின் கீழ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற அனுப்பப்பட்டார்.
அவர் எப்போது விடுவிக்கப்பட வேண்டும் அல்லது விடுவிக்கப்படலாமா என்பதை மருத்துவர்களே தீர்மானிப்பர் என்று நீதிமன்றம் அறிவித்தது.