மஸ்கெலியா, பிரதேச சபையின் கீழ் உள்ள சாமிமலை மல்லியப்பு சந்தியில் நீண்ட காலமாக முறிந்து விழக்கூடிய அபாயத்தில் காணப்படும் பூவரசன் மரத்தால் தாம் தினமும் அச்சத்தை எதிர் கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மரத்தின் கிளைகள் திடீரென முறிந்து விழுவதால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்பட கூடும் என குறித்த இடத்தில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் ஆட்டோ சாரதிகள் பிரயாணிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மரத்தின் கிளைகள் கடந்த காலங்களில் முறிந்து விழுந்ததில் சில வாகனங்கள் சேதமாகியுள்ளதுடன் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த மரத்தின் அருகாமையில் சில வர்த்தக நிறுவனங்கள் முச்சக்கர வண்டி தரிப்பிடம் மக்கள் குடியிருப்புகள் போன்றவை காணப்படுகின்றன மேலும் சாமிமலை மஸ்கெலிய காட்மோர் போன்ற இடங்களுக்கு செல்லும் பயணிகள் இவ்விடத்தில் ஒன்று கூடுவது வழக்கம்.
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த மரக்கிளை ஒன்று முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது இதனால் இவ்விடத்தில் உள்ள வர்த்தகர்கள் ஆட்டோ சாரதிகள் பிரயாணிகள் பெரும் அச்சத்தை எதிர் நோக்கி வருவதாகவும் எனவே இது குறித்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்
சாமிமலை. ஞானராஜ்
