மரம் முறிந்து விழுந்து பெண் தொழிலாளி பலி: மேலும் இருவர் காயம்

இரத்தினபுரி, கஹவத்தை ஓபாவத்த தோட்டத்தில் பிரிவு மூன்றில் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும் இரண்டு பெண்கள் பாரிய காயங்களுடன் இரத்தினபுரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் நிலைமை கவலைக்கிடம் உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 48 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான (தமிழ்ச்செல்வி) என காவல் துறையினர் தெரிவித்தனர்.

இன்று காலை தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்பத்தில்இந்த அனர்த்த இடம் பெற்றுள்ளது.

எம்.எப்.எம். அலி

 

Related Articles

Latest Articles