நுவரெலியாவில் கடும் மழையுடனான சீரற்ற வானிலை நிலவிவருகின்றது. கடும் காற்றும் வீசுகின்றது. இந்நிலையில் இன்று (27)அதிகாலை 4.00 மணி அளவில் வீசிய காற்று காரணமாக நுவரெலியா – பதுளை வீதியில் உள்ள பாரிய மரம் முறிந்து விழுந்துள்ளது.
இதனால் நுவரெலியா – பதுளை வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், இராணுவத்தினர் , பொலிஸார் ஆகியோரின் உதவியுடன் மரம் வெட்டி அகற்றப்பட்டது.
வீ. தீபன்ராஜ்